Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா பாகிஸ்தான் போட்டியை விட இந்த போட்டிதான் தரமாக இருக்கும்.. முன்னாள் கேப்டன் கங்குலி கருத்து!

Webdunia
திங்கள், 3 ஜூலை 2023 (09:22 IST)
இந்தியாவில் நடக்க உள்ள உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த தொடருக்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் அக்டோபர் 15 ஆம் தேதி நடக்க உள்ளது. இப்போட்டியை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த போட்டியால் அகமதாபாத் நகரில் போட்டி நடக்கும் நாளன்று ஹோட்டல்களில் அறை வாடகை உச்சத்தைத் தொட்டுள்ளது.
போட்டி நாளன்று நட்சத்திர ஹோட்டல்களில் 15ஆயிரம் ரூபாயாக இருந்த அறைகளின் வாடகை 1லட்சம் ரூபாய் வரை சென்றுள்ளதாகவும், 7000 ரூபாயாக இருந்த அறை வாடகை 70000 ரூபாய் வரையும் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இந்த போட்டியை விட இந்தியா ஆஸ்திரேலியா மோதும்போட்டிதான் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய போட்டி என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து “இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் ஒருதலைபட்சமாக உள்ளன. பெரும்பாலான போட்டிகளில் இந்திய அணியே வெல்கிறது. துபாயில் நடந்த போட்டியில் மட்டுமே பாகிஸ்தான் வென்றது. ஆனால் சமபலம் கொண்ட இந்தியா மற்றும ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி மிகவும் சிறப்பாக இருக்கும்” எனக் கூறியுள்ளார் கங்குலி. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெத்தையைப் போட்டு சொகுசாக ஃபீல்டிங் பயிற்சி மேற்கொள்ளும் பாகிஸ்தான் வீரர்கள்… வைரலாகும் ட்ரோல்கள்!

ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் உச்சம் தொட்ட இந்திய வீரர்!

பிரதமர் மோடியுடன் இந்திய வீரர்கள் சந்திப்பு..! மும்பையில் இன்று மாலை பாராட்டு விழா..!!

மைக் மோகனின் ஹரா படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? எந்த ப்ளாட்பார்மில்?

15 திருமண நாளை கேக் வெட்டிக் கொண்டாடிய தோனி- சாக்‌ஷி தம்பதி!

அடுத்த கட்டுரையில்
Show comments