Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் ஷர்மாவைக் காப்பாற்ற பார்க்கிறார் கங்குலி… வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

Webdunia
புதன், 14 ஜூன் 2023 (08:23 IST)
நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி பரிதாபகரமாக தோற்றது. அதனால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பேசிய கருத்து ஒன்று சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.  ஒரு நேர்காணலில் அவர்  “ரோஹித் ஷர்மா மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர் ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார். உலகக்கோப்பையை வெல்வதை விட ஐபிஎல் கோப்பையை வெல்வது கடினமானது. ஏனென்றால் உலகக்கோப்பையில் நீங்கள் 4-5 போட்டிகளை விளையாடியதும், அரையிறுதிப் போட்டிக்கு செல்லலாம். ஆனால் ஐபிஎல்-ல் 14 போட்டிகள் விளையாடி, அதன் பின்னர் ப்ளே ஆஃப் விளையாடி, பின்னரே இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும்” எனக் கூறியிருந்தார்.

இதையடுத்து ரசிகர்கள் இப்போது “கங்குலி, ரோஹித் ஷர்மாவைக் காப்பாற்றுவதற்காக அவரின் மக்கள் தொடர்பாளர் பேசுகின்றார்” என்று ட்விட்டரில் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காதலிக்கு திருமணப் பரிசாக ரொனால்டோ அளித்த மோதிரத்தின் விலை இத்தனைக் கோடியா?

ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு எப்போது?

சிஎஸ்கே அணியிடம் இருந்து ‘அதை’தான் கேட்டுள்ளேன்… அஸ்வின் விளக்கம்!

100 கோடி நஷ்டஈடு வழக்கு! நீதிமன்றம் வர மறுத்த தோனி! - என்ன காரணம்?

மாநில டி 20 லீக்கில் இருந்து தடை செய்யப்பட்ட யாஷ் தயாள்!

அடுத்த கட்டுரையில்
Show comments