டெஸ்ட் போட்டிகளில் கோலியின் ‘இன்மை’யை உணர்வேன் – கேப்டன் ஷுப்மன் கில் வருத்தம்!

vinoth
செவ்வாய், 27 மே 2025 (07:41 IST)
இந்திய அணி ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான அணியில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இருந்த பெரும்பாலான வீரர்கள் மீண்டும் இடம் பிடித்துள்ளனர். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெற்றதால், இளம் வீரர்கள் சிலருக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.

இளம் இந்திய அணிக்குக் கேப்டனாக ஷுப்மன் கில்லும், துணைக் கேப்டனாக ரிஷப் பண்ட்டும் அறிவிக்கப்பட்டுள்ளனர். 25 வயதாகும் ஷுப்மன் கில் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா போன்ற அனுபவம் மிக்க வீரர்களுக்குப் பிறகு இந்திய அணியை வழிநடத்த உள்ளார்.

இந்நிலையில் அனுபவம் மிக்க வீரர்கள் இல்லாமல் இங்கிலாந்து தொடருக்கு செல்வதைப் பற்றி பேசியுள்ள ஷுப்மன் கில் “இங்கிலாந்து தொடரில் நான் கோலியை மிகவும் ‘மிஸ்’ செய்வேன். அவரோடு இணைந்து பேட் செய்த இன்னிங்ஸ்கள் நல்ல நினைவுகள். நான் அவரது ஆட்டத்தை தொலைக்காட்சியில் பார்த்து வளர்ந்தவன். அவருடன் இணைந்து களத்தில் விளையாடிய தருணங்கள் என் வாழ்வில் மறக்க முடியாதவை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா புயலில் வீழ்ந்த தென்னாப்பிரிக்கா.. 159 ரன்களுக்கு ஆல் அவுட்..!

இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி.. ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை தூக்கிய பும்ரா

சேட்டன் வந்தல்லோ… கையெழுத்தானது ‘டிரேட்’… சென்னையில் சஞ்சு சாம்சன்!

ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை: ஐபிஎல் வரலாற்றில் 3 முறை 'டிரேட்' செய்யப்பட்ட முதல் வீரர்!

தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments