சென்னையில் இருந்து அகமதாபாத் புறப்பட்ட ஷுப்மன் கில்!

Webdunia
வியாழன், 12 அக்டோபர் 2023 (14:28 IST)
உலகக் கோப்பையின் இந்தியாவின் முதல்  இரண்டு போட்டிகளிலும் டெங்கு காய்ச்சல் காரணமாக ஷுப்மன் கில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியிலும் அவர் பங்கேற்க மாட்டார் என சொல்லப்படுகிறது.

காய்ச்சல் காரணமாக இந்திய அணியோடு டெல்லி செல்லாத அவர் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்தத்தில் உள்ள தட்டையணுக்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடதாகவும் அன்று மாலையே சிகிச்சை முடிந்து அவர் ஹோட்டலுக்கு திரும்பியதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் நேற்று மாலை அவர் சென்னையில் இருந்து அகமதாபாத்துக்கு விமானம் மூலம் கிளம்பியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடுவாரா என்ற நம்பிக்கை இப்போது எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் ஐபிஎல் போட்டியில் முதல் சதம்.. உலக சாதனை செய்த வீராங்கனை..!

10 ஓவர்களில் சோலியை முடித்த இந்திய அணி.. அபிஷேக் சர்மாவின் வரலாற்று சாதனை..!

உலகக்கோப்பையை தவிர்ப்போம் என கூறிவிட்டு அணியை அறிவித்த பாகிஸ்தான்.. பூச்சாண்டி காட்டுகிறதா?

வங்கதேசத்தை நீக்கினால் உலக கோப்பை தொடரில் நாங்களும் விலகுவோம்: பாகிஸ்தான்

கோஹ்லி, ரோஹித்துக்கு ரூ.4 கோடி சம்பளம் குறைப்பா? பிசிசிஐ சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments