Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியின் விலகலால் ஸ்ரேயாஸ் ஐயருக்குக் கிடைத்த கௌரவம்!

Webdunia
வெள்ளி, 22 மார்ச் 2024 (07:13 IST)
ஐபிஎல் 2024 சீசன் இன்று மாலை தொடங்க உள்ள நிலையில் சிஎஸ்கே கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக் கொள்கின்றன.

இந்நிலையில் நேற்று மாலை சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் அறிவிக்கப்பட்டார். சிஎஸ்கே அணிக்கு கடந்த 2008 முதலாகவே எம்.எஸ்.தோனி கேப்டனாக இருந்து வந்த நிலையில் இடையில் ஜடேஜா கேப்டனாக அறிவிக்கப்பட்டு, அவரால் அணியின் பளுவை சுமக்க முடியாமல் அந்த பொறுப்பில் இருந்து விலகினார்.

அதன் பின்னர் அணிக்கு மீண்டும் தலைமையேற்ற தோனி கடந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்று தந்தார். இந்நிலையில் இப்போது அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளதால் ஐபிஎல் தொடரில் மிகவும் அனுபவம் மிக்க கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் மாறியுள்ளார். அவர் 55 ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. மற்ற வீரர்கள் அனைவரும் அவரை விட அனுபவம் குறைந்த இளம் கேப்டன்களாக உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன் பட்டம் போனால் என்ன? தொடர் நாயகன் விருது நியூசிலாந்து அணிக்கு தான்..!

இந்திய அணி வெற்றி.. சென்னை மெரினாவில் கொண்டாடிய ரசிகர்கள்..

இந்தியாவின் அதிரடியில் ஆட்டம் கண்ட நியூசி! 252 டார்கெட்! - சாதிக்குமா இந்தியா!

இந்திய சுழலில் விழுந்த மூன்று விக்கெட்டுகள்.. பைனலில் அசத்தும் இந்திய அணி..!

Champions Trophy Finals: நியூசிலாந்து பேட்டிங் தேர்வு! மீண்டும் மேஜிக் செய்வாரா வருண் சக்ரவர்த்தி! - ப்ளேயிங் 11 விவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments