Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரேயாஸ், இஷான் கிஷானைக் கழட்டிவிட்ட பிசிசிஐ.. ரஞ்சி கோப்பை புறக்கணிப்பு எதிரொலியா?

vinoth
வியாழன், 29 பிப்ரவரி 2024 (07:08 IST)
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடவில்லை. அதனால் அவர் கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டார். அவருக்கு உடலில் சிறு பிரச்சனைகள் இருந்ததால் பெங்களூருவில் இருந்த தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிகள் மேற்கொண்டார்.

அங்கு அவர் உடல் தகுதி பெற்று விட்டதாக சான்றிதழ் அளிக்கப்பட்டார். இதையடுத்து அவர் மும்பை அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதுகு வலியை காரணம் காட்டி அவர் ரஞ்சி கோப்பையில் இருந்து விலகியுள்ளார். இதே போல மும்பையைச் சேர்ந்த மற்றொரு வீரரான இஷான் கிஷனும் ரஞ்சிக் கோப்பை தொடரை புறக்கணித்துவிட்டு ஐபிஎல் தொடருக்காக பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் இவர்கள் இருவரின் இந்த செயலால் இப்போது பிசிசிஐ அவர்களின் வருடாந்திர ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. சமீபத்தில் வீரர்களுக்கான புதிய ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இஷான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ராவை ஸ்மார்ட்டாக பயன்படுத்த வேண்டும்… வெற்றிக்குப் பின்னர் ரோஹித் ஷர்மா பேச்சு!

மிடில் ஓவர்களில் அட்டாக் செய்து விளையாடுவதுதான் என் ஸ்டைல்… ஆட்டநாயகன் சூர்யகுமார்!

24 பந்துகளில் 20 டாட் பந்துகள்… ஆப்கானிஸ்தான் சோலியை முடித்த பும்ரா!

சூப்பர் 8 போட்டியில் இந்தியாவுக்கு முதல் வெற்றி.. சூர்யகுமார் யாதவ் அபாரம்..!

வெளிநாட்டு வீரரை தன் பயிற்சியாளர் குழுவுக்குள் இணைக்க ஆசைப்படும் கம்பீர்!

அடுத்த கட்டுரையில்
Show comments