Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ஷேன் வார்னே?

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ஷேன் வார்னே?
, சனி, 2 ஏப்ரல் 2016 (13:16 IST)
இந்திய அணியின் பயிற்சியாளராக வர தான் விரும்புவதாக ஆஸ்திரேலியாவின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே விருப்பம் தெரிவித்துள்ளார்.


 
 
இந்திய அணியின் இயக்குனராக பணியாற்றி வரும் ரவி சாஸ்திரியின் பணி ஒப்பந்த காலம் உலகக் கோப்பையுடன் முடிந்து விட்டது. இந்திய அணி தற்போது முழு நேர பயிற்சியாளர் இல்லாமல் தான் விளையடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்க இந்திய கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்துள்ளது. இதனையடுத்து இந்திய அணியுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என ஷேன் வார்னே கூறியுள்ளார்.
 
இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய ஷேன் வார்னே, இந்திய அணி வீரர்கள் மிகவும் திறமைசாலிகள். எனது வாழ்க்கையில் எந்த வாய்ப்பையும் நான் மறுத்ததில்லை. ஒரு வேளை இந்திய அணிக்கு பயிற்சியாளர் ஆகும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளுவேன் என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil