Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“கிரிக்கெட் நிர்வாக அனுபவம் இல்லை…” பிசிசிஐ முடிவை சாடிய பாகிஸ்தான் முன்னாள் வீரர்!

Webdunia
வியாழன், 20 அக்டோபர் 2022 (09:51 IST)
ஆசிய நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை தொடர் இந்த ஆண்டு ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் நடந்தது. இதில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து அடுத்த ஆண்டு 50 ஓவர் போட்டியாக நடக்கும் எனவும், அது பாகிஸ்தானில் நடக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் எதிர்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதில்லை. ஐசிசி தொடர்களில் மட்டும் மோதுகின்றன. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடந்தால் இந்திய அணி அங்கு செல்லாது என்றும், மாறாக ஆசியக் கோப்பை வேறு ஒரு பொதுவான நாட்டுக்கு மாற்றப்படலாம் எனவும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார்.

இதற்கு பாகிஸ்தான் தரப்பில் கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. இதுபற்றி பேசியுள்ள பாகிஸ்தான்  முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி “கடந்த ஒரு ஆண்டாக இரண்டு நாடுகளிலும் நல்லுணர்வை ஏற்படுத்திய நிலையில் ஏன் ஜெய் ஷா இந்த அறிக்கையை வெளியிடுகிறார். இந்த முடிவு இந்தியாவில் கிரிக்கெட் நிர்வாக அனுபம் இன்மையைக் காட்டுகிறது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டன் சஞ்சு சாம்சன் அவுட்.. பெங்களூருக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெறுமா?

அவர்கள் போட்டியை முடித்ததை நினைத்தால் எனக்கு இன்னமும் சிரிப்பு வருகிறது –ஸ்ரேயாஸ் ஐயர்!

மேக்ஸ்வெல்லின் செயலால் கடுப்பான ஸ்ரேயாஸ் ஐயர்…!

வாரி வழங்கும் வள்ளல் ஆன ஷமி… நேற்றையப் போட்டியில் படைத்த மோசமான சாதனை!

தோனி, அஸ்வினின் மூளை வேலை செய்வது நின்று விட்டதா?... கடுமையாக விமர்சித்த மனோஜ் திவாரி!

அடுத்த கட்டுரையில்
Show comments