Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போல அமெரிக்காவில் கிரிக்கெட் லீக் – அணிக்கு உரிமையாளராகும் ஷாருக்!

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2020 (10:21 IST)
அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கில் டி 20 லீக் போட்டிகள் 2022 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட உள்ளன.

மேஜர் லீக் கிரிக்கெட் (எம்.எல்.சி.) என்ற டி 20 கிரிக்கெட் தொடரை அமெரிக்காவில் 2022 ஆம் ஆண்டு முதல் நடத்த உள்ளது. இந்த தொடரில் ஷாருக் கான் மற்றும் நடிகை ஜூகி சாவ்லா ஆகியோர் உரிமையாளர்களாக இருக்கும் நைட் ரைடர்ஸ் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது. மேலும் கலந்துகொள்ளும் 6 அணிகளில் ஒன்றான லாஸ் ஏஞ்சல்ஸ் அணியை வாங்கவும் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கரிபியன் லீக்கில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளை நைட் ரைடர்ஸ் நிறுவனம் நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!

கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் அதிக பாசம்… ஆனால் அணிக்குள் மூன்று பேர் எதற்கு?- அஜிங்யா ரஹானே கேள்வி!

கோலி ஆக்ரோஷமாக செயல்பட்டாலும் அதில் கிங்… ஆனால் கில்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

தோனிதான் அந்த விஷயத்தில் மாஸ்டர்… ஷுப்மன் கில் அதைக் கற்றுக்கொள்ளலாம்- கேரி கிரிஸ்டன் அறிவுரை!

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments