Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“இதற்காகதான் ஷமி வேண்டும் என்கிறேன்..” ஷேவாக் சொல்லும் காரணம்!

Webdunia
சனி, 10 செப்டம்பர் 2022 (14:32 IST)
இந்திய டி 20 அணியில் முகமது ஷமி இல்லாதது இழப்பு என்று விரேந்திர சேவாக் பேசியுள்ளார்.

ஆசியக் கோப்பையை வெல்லும் அணியாக கணிக்கப்பட்ட இந்தியா, இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாமல் சூப்பர் 4 சுற்றில் இருந்து வெளியேறியது. இதற்கு மிக முக்கியக் காரணம் இந்திய அணியின் பவுலிங் சொதப்பலே காரணம் என்று சொல்லப்படுகிறது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விமர்சித்து பேசியுள்ளார். இந்திய அணியில் முகமது ஷமில் இல்லாதது தனக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதுபற்றி "குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தேர்வு சிறப்பாக இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். இங்குள்ள நிலைமைகள் உங்களுக்குத் தெரியும். ஸ்பின்னருக்கு இதில் அதிகம் இல்லை. நீங்கள் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் (ஹர்திக் உட்பட) இங்கு வந்தது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. உங்களுக்கு அந்த கூடுதல் தேவை... முகமது ஷமி போன்ற ஒருவர் வீட்டில் அமர்ந்து தனது குதிகால்களை குளிர்விப்பது என்னை குழப்புகிறது. ஐபிஎல் தொடரை சிறப்பாக முடித்த அவருக்கு அவருக்கு வாய்ப்புக் கிடைக்காததை நான் வித்தியாசமான ஒன்றைப் பார்க்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து தற்போது மற்றொரு மூத்த வீரரான ஷேவாக் இதுபற்றி “ஷமியை டி 20 போட்டிகளில் விளையாட விடாமல் வைத்திருப்பது தவறான முடிவாகும். இதே போன்ற பிரச்சனையை முன்பு அஸ்வினும் எதிர்கொண்டார். ஆசியக் கோப்பையில் ஷமி இருந்திருந்தால், முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கலாம். பவுலர்கள் காயம் அடைந்த போது அவரைப் பயன்படுத்தி இருக்கலாம். ஆஸ்திரேலியாவில் டி 20 உலகக்கோப்பை நடக்கும் மைதானங்களில் ஷமி சிறப்பாக செயல்படுவார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

ஆர்சிபி கனவுக்கு ஆப்பு வைக்குமா மழை? மஞ்சள் படையை எதிர்கொள்ளும் நாளில் ஆரஞ்சு அலெர்ட்!

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments