ஆஷஸ் இரண்டாவது போட்டி: முதல் நாளில் அதிரடி காட்டிய ஆஸி. பேட்ஸ்மேன்கள்- திணறிய இங்கிலாந்து பவுலர்கள்!

Webdunia
வியாழன், 29 ஜூன் 2023 (07:10 IST)
நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டாவது ஆஷஸ் போட்டி தொடங்கிய நிலையில் முதலில் ஆஸி அணி பேட்டிங் செய்தது. ஆஸி அணிக்கு டேவிட் வார்னர் நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தார்.

அரைசதம் அடித்த அவர் ஜோஷ் டங்க் ஓவரில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த மார்னஸ் லபுஷான், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் சிறப்பாக விளையாட ஆஸியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.  டிராவிஸ் ஹெட் 73 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்து அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்.

ஸ்டீவ் ஸ்மித் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் சேர்த்துள்ளார். முதல் நாள் ஆட்டமுடிவில் ஆஸி அணி 339 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்களை இழந்துள்ளது. இங்கிலாந்தின் பாஸ்பால் ஆட்டத்துக்கு எதிராக ஆஸி வீரர்கள் 4 ரன்ரேட்டுக்கு மேல் அடித்து போட்டியை விறுவிறுப்பாக்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய உலக சாதனையை படைத்த ஸ்மிருதி மந்தனா.. குவியும் வாழ்த்துக்கள்..!

ஒரு கட்டத்தில் இனிமேல் கிரிக்கெட்டே வேண்டாம் என்று கூட தோன்றியது: ரோஹித் சர்மா

கேப்டன் சுப்மன் கில் நீக்கப்படுவார் என எதிர்பார்க்கவே இல்லை: முன்னாள் கிரிக்கெட் வீரர்

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை.. பாகிஸ்தானிடம் இந்தியா படுதோல்வி

சென்னை அணியை வாங்கிய ஐசரி கணேஷ்.. 'வேல்ஸ் சென்னை கிங்ஸ்' என பெயர் மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments