Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரலாறு படைத்தது ஸ்காட்லாந்து: இங்கிலாந்து அணிக்கு ஷாக்

Webdunia
திங்கள், 11 ஜூன் 2018 (14:11 IST)
எடின்பர்க்கில் நடந்த ஒருநாள் போட்டியில் கத்துக்குட்டி ஸ்காட்லாந்து அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் ஒருநாள் போட்டியில் முதலிடத்தில் உள்ள இங்கிலாந்து அணியை வீழ்த்தி புதிய வரலாறு படைத்தது.

 
 
ஸ்காட்லாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இங்கிலாந்து அணி ஒரேயொரு ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் நேற்று விளையாடியது. எடின்பர்க்கில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.
 
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணியின் வீரர்கள் இங்கிலாந்து அணியினர் பந்துவீச்சை மைதானத்தின் நாளாபுறமும் சிதறடித்தனர். இதனால் அந்த அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக மெக்லியோட் 140 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் பிளன்கெட் மற்றும் ரஷீத் தலா 2 வீக்கெட்டுகளை கைப்பற்றினர்.
 
372 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் அதிரடியாக விளையாடினாலும் பேர்ஸ்டோவ் மற்றும் ஹேல்ஸ் வீக்கெட்டுகளை இழந்த பின் அந்த அணி தடுமாறியது. இந்த சந்தர்பத்தை சரியாக பயன்படுத்திய ஸ்காட்லாந்து அணி பவுலர்கள் அந்த அணியினருக்கு நெருக்கடி கொடுத்தனர். ஆனாலும், 8வது வீக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த மோயீன் அலி மற்றும் பிளன்கெட் சிறப்பாக விளையாடியும் இறுதியில் ஸ்காட்லாந்து அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி 48.5 ஓவர்களில் 365 ரன்கள் எடுத்து அனைத்து வீக்கெட்டுகளையும் இழந்தது. அதிகப்பட்சமாக பேர்ஸ்டோவ் 105 ரன்கள் எடுத்தார்.
 
இந்த போட்டியின் வெற்றியின் மூலம் ஸ்காட்லாந்து அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. மேலும் இங்கிலாந்து அணியை முதல் முறையாக ஒருநாள் போட்டியில் வீழ்த்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் மிதவேக பவுலரா… பத்திரிக்கையாளர்களின் நக்கல் கேள்விக்கு பெர்த் டெஸ்ட்டில் பதில் சொன்ன பும்ரா!

ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டரை துவம்சம் செய்த பும்ரா…!

2025 முதல் 2027 வரை ஐபிஎல் போட்டிகள் எப்போது? அட்டவணை இதோ..!

IND vs AUS Test: 150க்கு மொத்தமா விக்கெட் காலி! இந்தியாவை முடித்துவிட்ட ஆஸி. பவுலர்கள்!

ஏலத்தில் எந்த டீமுக்கு செல்லப் போகிறீர்கள்?... போட்டியின் நடுவே ரிஷப் பண்டிடம் கேள்வி கேட்ட ஆஸி பவுலர்!

அடுத்த கட்டுரையில்
Show comments