’கொட்டாவி விடுவதெல்லாம் சாதாரண விஷயம்’…..ரசிகர்களுக்கு பதிலளித்த பாகிஸ்தான் கேப்டன்

Webdunia
திங்கள், 24 ஜூன் 2019 (13:56 IST)
கொட்டாவி விடுவதெல்லாம் மிகவும் சாதாரண விஷயம் எனவும், அதனை பெரிதுபடுத்திப் பேச வேண்டாம் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ஃபராஸ் கூறியுள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், சில நாட்களுக்கு முன்பு நடந்த இந்தியாவுடனான போட்டியில், பாகிஸ்தான் அணி படு தோல்வி அடைந்தது.

இதனிடையே அந்த போட்டி மும்முரமாக நடந்து கொண்டிருக்கையில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபராஸ் கொட்டாவி விட்டு கொண்டு நின்றார்.

அதன் பின்பு சர்ஃபராஸ் கொட்டாவி விட்டு கொண்டு நின்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு கேலிக்குள்ளாக்கப் பட்டது.

மேலும் இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் கோபத்திற்கு உள்ளாகினர். இதனை தொடர்ந்து, இது குறித்து பதிலளித்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபராஸ், கொட்டாவி விடுவதெல்லம் சாதாரண விஷயம் என கூறியுள்ளார்.

மேலும் அவர் விளையடும் போது கொட்டாவி வருவதை பலர் கேலி செய்து வருகின்றனர் என்றும் இதற்கு முன்பு உலக கிரிக்கெட் அணியிலுள்ள பல கிரிக்கெட் வீரர்கள், விளையாடும்போது கொட்டாவி விட்டிருக்கின்றனர் என்பதால், இதனை பெரிது படுத்த வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.

ஏற்கனவே பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மீது கடும் கோபத்தில் இருந்த நிலையில், தற்போது சர்ஃபராஸ் அளித்துள்ள பதில், மேலும் ரசிகர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

ஐபிஎல் மினி ஏலம்: 350 வீரர்களுடன் இறுதிப் பட்டியல் வெளியீடு!

சஞ்சு சாம்சனுக்கு பதில் ஷுப்மன் கில் துவக்க ஆட்டக்காரர்: மாற்றம் ஏன்? சூர்யகுமார் விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? டிகே சிவகுமார் முக்கிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments