Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன்.. 194 ரன்கள் இலக்கு! – சாதிக்குமா லக்னோ அணி!

Prasanth Karthick
ஞாயிறு, 24 மார்ச் 2024 (17:39 IST)
நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் சிறப்பாக விளையாடி 193 ரன்களை குவித்துள்ளது.



2024ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இன்று பிற்பகல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதிக் கொள்கின்றன.

முதலில் பேட்டிங் தேர்வு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்துள்ளது. தொடக்க விரர்களாக களம் இறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 24 ரன்களிலும், ஜாஸ் பட்லர் 11 ரன்களிலும் அவுட் ஆனார்கள்.

ALSO READ: டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு.. ப்ளேயிங் 11-ல் யார் யார்? – RR vs LSG!

ஆனால் அடுத்து களமிறங்கிய அணி கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 52 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடித்து 82 ரன்களை குவித்தார். அவருடன் ரியான் பராக்கும் பார்ட்னர்ஷிப் அமைத்து 43 ரன்கள் அடித்திருந்த நிலையில் அவுட் ஆனார்.

தற்போது 194 ரன்கள் இலக்குடன் லக்னோ அணி களம் இறங்க உள்ளது. லக்னோ அணியில் டி காக், தேவ்தத் படிக்கல் உள்ளிட்டவர்கள் நல்ல ஃபார்மில் இருந்தாலும் இந்த போட்டியில் அவர்கள் வெற்றி எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மண்ணில் விளையாடுவதால் அழுத்தம் இருக்கும்… ஆஸி கேப்டன் பேட் கம்மின்ஸ் பதில்!

முதல் டெஸ்ட்டில் நிதீஷ் குமாருக்கு வாய்ப்பு… பவுலிங் பயிற்சியாளர் பகிர்ந்த தகவல்!

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: 3-வது முறையாக சாம்பியன் ஆனது இந்தியா..!

கோலியைக் கொண்டாடும் ஆஸி ஊடகங்கள்.. ஆனால் உளவியல் ரீதியாகத் தாக்கும் ஆஸி வீரர்கள்…!

அவர் இருந்திருந்தா நாங்க எல்லாம் களைப்பாகிவிடுவோம்… இந்திய வீரர் குறித்து நிம்மதி பெருமூச்சு விட்ட ஆஸி பவுலர்!

அடுத்த கட்டுரையில்
Show comments