Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு பறிபோனது… சஞ்சு சாம்சன் பகிர்ந்த தகவல்!

vinoth
செவ்வாய், 22 அக்டோபர் 2024 (08:05 IST)
இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம்பிடிக்க கடந்த சில ஆண்டுகளாக போராடி வருகிறார். ஆனால் அவருக்கு போட்டியாக ரிஷப் பண்ட், இஷான் கிஷான் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் இருக்கின்றனர். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலைமையேற்று வழிநடத்தும் சஞ்சு, இப்போதுதான் சில போட்டிகளில் வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். ஆனால் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

இந்நிலையில்தான் வங்கதேசத்துக்கு டி 20 போட்டியில் அவருக்கு இடம் கிடைத்து சதமடித்து அசத்தினார். இதன் மூலம் இனிமேல் அவருக்குத் தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பிடித்தும் ஒரு போட்டியில் கூட விளையாடாதது குறித்து  அவர் பேசியுள்ளார். அதில் “உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நான் விளையாட வாய்ப்புள்ளதாகவும் என்னைத் தயாராக இருக்கச் சொல்லியும் தகவல் வந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் ஏற்கனவே விளையாடிய அணியே விளையாடட்டும் என முடிவெடுக்கப்பட்டது. டாஸுக்குப் பின்னர் ரோஹித் வந்து என்னிடம் மன்னிப்புக் கேட்டார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்ஸ்டாகிராமில் விளம்பரப் பதிவுகளை நீக்கிய கோலி… என்ன காரணம்?

பேட்டில் பந்து பட்டதா… அல்லது பேட் தரையில் பட்டதா? – சர்ச்சையைக் கிளப்பிய ரியான் பராக் விக்கெட்!

கம்பீர் கொடுத்த அட்வைஸ்தான் என் மகனுக்கு உதவியது… பிரயான்ஷ் ஆர்யாவின் தந்தை நெகிழ்ச்சி!

இது என் கிரவுண்ட்.. இங்க என்னைக் கண்ட்ரோல் பண்ணவே முடியாது- டிவில்லியர்ஸின் சாதனையை சமன் செய்த சாய்!

சாய் சுதர்சனின் அபார இன்னிங்ஸ்.. ராஜஸ்தானை வீழ்த்தி முதலிடத்துக்கு சென்ற குஜராத் டைட்டன்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments