கோலி மட்டுமா யாருமே அந்த மைதானத்தில் ரன்கள் சேர்க்கவில்லை- ஆதரவுக் குரல் தெரிவித்த முன்னாள் பயிற்சியாளர்!

vinoth
சனி, 15 ஜூன் 2024 (11:21 IST)
இந்த உலகக் கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி விளையாடிய மூன்று போட்டிகளிலும் சேர்த்து 5 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார்.  அமெரிக்காவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். இது அவர் மேல் கடுமையான விமர்சனங்களை எழவைத்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கோலிக்கு ஆதரவாக பேசியுள்ளார். அவர், “நியுயார்க் மைதானத்தில் கோலி மட்டுமில்லை, வேறு யாருமே பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 போட்டிகள் தொடங்கும் போது இன்னும் அழுத்தம் அதிகமாகும். அப்போது கோலியிடம் இருந்து ஒரு சிறப்பான இன்னிங்ஸ் வரும் என நான் நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

இந்த உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னர் தன்னுடைய உச்சகட்ட ஃபார்மில் இருந்தார் விராட் கோலி. ஐபிஎல் தொடரில் அவர் 700 க்கும் மேற்பட்ட ரன்களை சேர்த்து ஆரஞ்சு தொப்பியைக் கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டனையே வெளியே போக சொன்ன சன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர்.. அணிக்குள் பிரச்சனையா?

2026 ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா மதீஷா பத்திரனா? இலங்கை அணியின் முக்கிய அறிவிப்பு..!

பும்ராவுக்கு திடீரென நஷ்டமான ரூ.2 கோடி.. பிசிசிஐ என்ன செய்ய போகிறது?

என்னை தொடர்பு கொள்ளுங்கள்.. நாட்டை விட்டு ஓடிப்போன லலித் மோடி, காவ்யா மாறனுக்கு சொன்ன மெசேஜ்..

பாகிஸ்தானிடம் இருந்து இந்தியா தான் எங்களை காப்பாற்ற வேண்டும்.. மும்பை அணியின் ஆப்கானிஸ்தான் வீரர் வேண்டுகோள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments