Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சங்ககரா உலக சாதனை - கில்கிறிஸ்டின் சாதனையை முறியடித்தார்

சங்ககரா உலக சாதனை - கில்கிறிஸ்டின் சாதனையை முறியடித்தார்
, வெள்ளி, 30 ஜனவரி 2015 (16:11 IST)
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக வீரர்களை ஆட்டமிழக்க செய்தவர்கள் பட்டியலில் கில்கிறிஸ்டை பின்னுக்குத் தள்ளி சங்ககரா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
 
397 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள 37 வயதான இலங்கையின் குமார் சங்ககரா இதுவரை 474 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். அதில் 378 கேட்சுகளும் 96 ஸ்டெம்ப்ஸ்களும் அடங்கும்.
 
முதல் இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட் (474) இருந்தார். அவரது சாதனையை இலங்கை விக்கெட் கீப்பர் சங்ககரா முறியடித்துள்ளார். ஆடம் கில்கிறிஸ்ட் 287 ஒருநாள் போட்டிகளில் 417 கேட்சுகள் மற்றும் 55 ஸ்டெம்ப்ஸ் உட்பட 472 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
 
மூன்றாம் இடத்தில் தென் ஆப்பிரிகாவின் மார்க் பௌச்சரும் 424 (295 போட்டிகள் 402 கேட்சுகள் 22 ஸ்டெம்ப்ஸ்), நான்காம் இடத்தில் இந்தியாவின் மகேந்திர சிங் தோனியும் 314 (254 போட்டிகள் 229 கேட்சுகள் 85 ஸ்டெம்ப்ஸ்) உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil