Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்வியுடன் ஓய்வு பெற்றார் சங்ககரா; இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது தென் ஆப்பிரிக்கா

Webdunia
புதன், 18 மார்ச் 2015 (15:17 IST)
இன்று நடைபெற்ற முதல் காலிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை தோற்கடித்துள்ளது.
 
முதல் அரையிறுதி ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் ஆஞ்சலோ மேத்யூஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.
 

 
அதன்படி திலகரத்னே தில்ஷான் மற்றும் குசல் பெரேரா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆனால் தொடக்கமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. 10 பந்துகளை சந்தித்த குசல் பெரேரா 3 ரன்களுடன் வெளியேறினார்.
 
அடுத்ததாக 7 பந்துகளை சந்தித்த தில்ஷான் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் இலங்கை அணி 4 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின் குமார் சங்ககராவும், திரிமன்னேவும் நிதான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.
 
எனினும் 41 ரன்கள் எடுத்த போது திரிமன்னே அவுட் ஆகி வெளியேறினார். பின் இணைந்த ஜெயவர்தனேவும் பெரிதாக சோபிக்கவில்லை. 16 பந்துகளை சந்தித்த அவர் வெறும் 4 ரன்களில் ஏமாற்றினார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த கேப்டன் மேத்யூஸ் 19 ரன்னில் வெளியேறினார்.
 

 
குலசேகரா 1, கவுசல் 0 ரன்னிலும் வெளியேறினர். இதனால் இலங்கை அணி 116 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அரைச்சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட குமார் சங்ககரா 45 ரன்களில் அவுட்டானார்.
 
தென் ஆப்பிரிக்கா அணி வீரர்களின் அசாத்தியமான பந்து வீச்சினால் இலங்கை வீரர்கள் வருவதும், போவதுமாக அணிவகுப்பு நடத்திக் கொண்டிருந்தார்கள். பின்னர் களமிறங்கிய சமீரா 2 ரன்களிலும், மலிங்கா 3 ரன்களிலும் வெளியேற இலங்கை 37.2 ஓவர்களில் 133 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
 
மேலும் அடுத்தப் பக்கம்...

 
தென் ஆப்பிரிக்கா தரப்பில் இம்ரான் தாஹிர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜேபி டுமினி ‘ஹாட் டிரிக்’ விக்கெட்டுகள் விக்கெட்டுகளை கைப்பற்றினர். டேல் ஸ்டெய்ன், கெய்ல் அப்போட், மோர்னே மோர்கல் தலா 1 விக்கெட்டை எடுத்தனர்.
 

 
பின்னர் 134 ரன்கள் எடுத்தால் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஹாசிம் அம்லா 16 ரன்களில் ஏமாற்றினார். ஆனால், அதன் பிறகு இணைந்த டி காக் மற்றும் டு பிளஸ்ஸி இணைந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
 
டி காக் 57 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் எடுத்தார். டு பிளஸ்ஸி 31 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். ஆட்ட நாயகன் விருது 4 விக்கெட்டுகள் வீழ்த்திய தென் ஆப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர் பெற்றார். பல சாதனைகளை புரிந்த சங்ககரா  தனது கடைசித் தொடரில் தோல்வியுடன் ஓய்வு பெற்றார்.

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

Show comments