Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயசூர்யாவின் சாதனையை உடைத்தெறிந்து சங்ககரா புதிய சாதனை

ஜெயசூர்யாவின் சாதனையை உடைத்தெறிந்து சங்ககரா புதிய சாதனை
, புதன், 21 ஜனவரி 2015 (15:27 IST)
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர் சங்ககரா, தனது சக நாட்டு வீரரான ஜெயசூர்யாவின் சாதனையை முறியடித்துள்ளார்.
 

 
7 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான  4–வது ஆட்டம் நெல்சனில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
 
அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 276 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மஹேலா ஜெயவர்த்தனே 103 பந்துகளில் (9 பவுண்டரி, 3 சிக்ஸர்) 94 ரன்களும், சங்ககரா 83 பந்துகளில் (8 பவுண்டரி, 1 சிக்ஸர்) 76 ரன்களும் எடுத்தனர்.
 
பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி 48.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக கனே வில்லியம்சன் 107 பந்துகளில் (6 பவுண்டரி, 1 சிக்ஸர்) 103 ரன்களும், லுக் ரோஞ்சி 15 பந்துகளில் (1 பவுண்டரி, 3 சிக்ஸர்) 32 ரன்களும் குவித்தனர்.
 
சங்ககரா சாதனை:
 
இந்த ஆட்டத்தில், இலங்கை வீரர் சங்கக்கரா 17 ரன்களை எட்டிய போது ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் இருந்த தனது சகநாட்டு வீரரான, ஜெயசூர்யாவை பின்னுக்கு தள்ளி விட்டு 3ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
 
webdunia

 
394 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சங்ககரா, 13,490 ரன்கள் குவித்துள்ளார். முதல் இரண்டு இடங்களில், இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 463 போட்டிகளில் 18,426 ரன்களும், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 375 போட்டிகளில் 13,704 ரன்களும் குவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil