Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சங்ககரா ஒருநாள் போட்டிகளில் இரண்டு புதிய சாதனைகள் படைத்து அசத்தல்

சங்ககரா ஒருநாள் போட்டிகளில் இரண்டு புதிய சாதனைகள் படைத்து அசத்தல்
, வியாழன், 4 டிசம்பர் 2014 (09:41 IST)
இலங்கை வீரர் சங்ககரா அதிக ரன் குவிப்பு மற்றும் அதிக பேரை வெளியேற்றிய விக்கெட் கீப்பர் என்ற இரண்டு சாதனைகளை படைத்து அசத்தினார்.
 
இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹம்பன்டோடாவில் நேற்று நடந்தது. மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டம் 35 ஓவராக குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 8 விக்கெட்டுக்கு 242 ரன்கள் சேர்த்தது.
 
இந்த ஆட்டத்தில் சங்கக்கரா 13 ரன்கள் எடுத்தபோது ஒரு நாள் போட்டிகளில் 13 ஆயிரம் ரன்களை கடந்த 4ஆவது வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இந்த ஆட்டத்தில் அவரது பங்களிப்பாக 63 ரன்களை குவித்தார். இதுவரை சங்கக்கரா 386 போட்டிகளில் விளையாடி 19 சதத்துடன் 13,050 ரன்கள் குவித்துள்ளார்.
 
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில், அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 18,426 ரன்கள் குவித்து முதல் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங் 13,704 ரன்கள் குவித்து இரண்டாம் இடத்திலும், இலங்கையின் ஜெயசூர்யா 13,430 ரன்கள் குவித்து மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
 
webdunia

 
பிறகு இங்கிலாந்து அணி ஆடியபோது, அந்த அணி வீரர் அலெஸ்டர்  குக்கை சங்கக்கரா ஸ்டம்பிங் மூலம் வெளியேற்றினார். இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் அதிகம் பேரை ஆட்டம் இழக்கச் செய்த விக்கெட் கீப்பர் என்ற உலக சாதனையை படைத்தார்.
 
webdunia

 
சங்ககரா இதுவரை தான் விளையாடிய 386 ஆட்டங்களில் 473 பேரை வெளியேற்றி இருக்கிறார். இதற்கு முன்னர் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் 287 ஆட்டங்களில் 472 பேரை வெளியேற்றியதே விக்கெட் கீப்பரின் உலக சாதனையாக இருந்தது. இப்போது அந்த சாதனையை சங்ககரா முறியடித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil