“என்னை ஏன் ஏலத்தில் யாருமே எடுக்கவில்லை என தெரியவில்லை” – சந்தீப் ஷர்மா புலம்பல்!

Webdunia
புதன், 28 டிசம்பர் 2022 (15:29 IST)
ஆர் சி பி அணியின் கேப்டனாக இருக்கும் கோலி ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். ஆனால் அவரையே தன்னுடைய பந்துவீச்சில் அதிகமுறை அவுட் ஆக்கிய பெருமைக்குரியவர் சந்தீப் ஷர்மா. இதுவரை சில அணிகளுக்காக ஐபிஎல் விளையாடியுள்ள சந்தீப் ஷர்மா பவர் ப்ளே ஓவர்களில் சிறப்பாக வீசும் தன்மை கொண்டவர்.

ஆனால் சமீபத்தில் நடந்த ஏலத்தில் அவரை எந்த அணியும் எடுக்கவில்லை. இதுபற்றி பேசியுள்ள அவர் “என்னை ஏன் யாருமே ஏலத்தில் கேட்கவில்லை என்பது எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை. இதுவரை நான் விளையாடிய அணிகளில் சிறப்பாகவே விளையாடி இருக்கிறேன். இப்போது உள்ளூர் கிரிக்கெட்டிலும் சிறப்பாகவே விளையாடி வருகிறேன்.நன்றாக பந்துவீசுவது மட்டுமே என் கையில் உள்ளது. அணி நிர்வாகங்களை என்னால் கட்டுபடுத்த முடியாது” எனப் புலம்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘டெஸ்ட் ட்வண்ட்டி’… கிரிக்கெட்டில் அறிமுகமாகும் புதிய ஃபார்மட்!

கோலி எப்போதும் சூடாகவே இருப்பார்… ரவி சாஸ்திரி பகிர்ந்த தகவல்!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணையும் கேன் வில்லியன்ஸன்… ஆனால் வீரராக இல்லை..!

ஆஸ்திரேலிய தொடரில் கோலி படைக்கக் காத்திருக்கும் சாதனைகள்..!

ஆஸ்திரேலியா புறப்பட்ட ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி!

அடுத்த கட்டுரையில்
Show comments