Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சச்சின் 21ஆம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் - வாக்கெடுப்பில் முடிவு

சச்சின் 21ஆம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் - வாக்கெடுப்பில் முடிவு
, வியாழன், 25 ஜூன் 2015 (16:07 IST)
சச்சின் டெண்டுல்கர் 21ஆம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் வீரராக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிக்கெட் இணையத்தளம் நடத்திய வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 

 
2000ஆம் ஆண்டிற்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த 100 கிரிக்கெட் வீரர்கள் குறித்த வாக்கெடுப்பை ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்கெட் இணையதளம் ஒன்று நடத்தியது. இதில் இந்தியாவைச் சேர்ந்த ’மாஸ்டர் பேட்ஸ்மேன்’ சச்சின் டெண்டுல்கர் அதிக வாக்குகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
 
அவருக்கு அடுத்ததாக இலங்கை வீரர் குமார் சங்ககரா 2ஆவது இடத்தையும், ஆஸ்திரேலிய வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். டாப் - 10 பட்டியலில் 4 ஆஸ்திரேலிய வீரர்களும், 3 தென் ஆப்பிரிக்கா வீரர்களும், 2 இலங்கை வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.
 
டாப் 10 வீரர்கள்:
 
1. சச்சின் டெண்டுல்கர் 23% [இந்தியா], 2. குமார் சங்ககரா 14% [இலங்கை], 3. ஆடம் கில்கிறிஸ்ட் 13% [ஆஸி.], 4. ரிக்கி பாண்டிங் 11%, 5. ஜாக் காலிஸ் 11% [தெ.ஆ], 6. ஏபி டி வில்லியர்ஸ் 10% [தெ.ஆ], 7. ஷேன் வார்னே 9% [ஆஸி], 8. கிளென் மெக்ராத் 5% [ஆஸி], 9. முத்தையா முரளிதரன் 3% [இலங்கை], 10. டேல் ஸ்டெய்ன் 1% [தெ.ஆ].
 

Share this Story:

Follow Webdunia tamil