ரன் குடுத்துடாத உமேசு.. அடிச்சுட போறாய்ங்க! – பஞ்சாப்பை வெல்லுமா பெங்களூர்?

Webdunia
வியாழன், 24 செப்டம்பர் 2020 (14:01 IST)
அரபு அமீரகத்தில் இன்று நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் உடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மோத உள்ளது.

முன்னதாக இரு அணிகளும் ஆளுக்கு ஒரு போட்டி விளையாடியுள்ள நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதல் போட்டியில் வெற்றிபெறவில்லை என்பதால் இந்த போட்டியில் வெற்றிபெற தீவிரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் ஆட்டத்தில் அம்பையரின் தவறினால் சூப்பர் ஓவர் வரை சென்று தோல்வியை சந்தித்தாலும் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் பஞ்சாப் அணி வலுவாக உள்ளது. ஆர்சிபி பேட்டிங்கில் அதிக ரன் குவித்தாலும், பவுலிங்கில் நிறைய ரன்களை கொடுத்து விடுவது குறையாக பார்க்கப்படுகிறது.

கடந்த சன் ரைஸர்ஸுடனான ஆட்டத்தில் உமேஷ் யாதவ் ஒரு விக்கட் கூட எடுக்காமல் 4 ஓவர்களில் 48 ரன்கள் கொடுத்தது ராயல் சேலஞ்சர்ஸுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியது. சஹாலும், சைனி, துபே ஆகியோர் நிதானமாக விக்கெட்டுகளை சூறையாடியதால் ஆர்சிபியின் வெற்றி வாய்ப்பு அதிகரித்தது. அதனால் இந்த முறை துபேவுக்கு ஓவர்கள் அதிகம் கொடுத்து, உமேஷுக்கு ஓவர்களை குறைக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

46 ஆண்டுகளுக்குப் பிறகு… சாதனை படைத்த நியுசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல்!

2026 உலகக் கோப்பை கால்பந்து: 42 அணிகள் தகுதி! முழு விவரங்கள்..!

இந்தியா - வங்கதேச மகளிர் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு! ஷேக் ஹசீனா விவகாரம் காரணமா?

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

அடுத்த கட்டுரையில்
Show comments