Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு.. ஆஸி நிதான ஆட்டம்!

vinoth
சனி, 14 டிசம்பர் 2024 (08:08 IST)
இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளை வென்று 1-1 என்ற கணக்குடன் சமனில் உள்ளன.

இதையடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் கப்பா மைதானத்தில் தொடங்கியுள்ளது. இரு அணிகளிலுமே மாற்றம் நடந்துள்ளது. இந்திய அணியில் அஸ்வின் மற்றும் ஹர்ஷித் ராணா நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதில் ஜடேஜா மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆஸி அணியில் ஸ்காட் போலண்ட் நீக்கப்பட்டு அவருக்குப் பதில் ஜோஷ் ஹேசில்வுட் மீண்டும் அணிக்குள் திரும்பியுள்ளார்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணிக் கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளார். அதன்படி பேட் செய்த ஆஸி அணி உணவு இடைவேளைக்கு முன்பு விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் சேர்த்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் 2025 முதல் போட்டி: டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த அதிரடி முடிவு..!

தோனியின் பிட்னெஸை விட இதுதான் அவரின் பலம்… சுரேஷ் ரெய்னா கருத்து!

நண்பன் போட்ட கோட்ட தாண்டமாட்டேன்.. தோனி குறித்து நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்த பிராவோ!

இந்த முறை RCB அணிதான் கடைசி இடம்பிடிக்கும்… முன்னாள் ஆஸி வீரர் கருத்து!

ஐபிஎல் தொடருக்கு வர்ணனையாளராக வருகிறாரா கேன் மாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments