ரோஹித் ஓப்பனிங் இல்லாமல் இந்த இடத்தில் இறங்கவேண்டும்… கும்ப்ளே சொல்லும் ஐடியா

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2023 (14:37 IST)
கடந்த 10 சீசன்களாக தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றதே இல்லை என்ற ஒரு குறை நேற்றும் பலித்தது. மும்பை அணியில் பேட்டிங்கில் திலக் வர்மா தவிர, மற்ற அனைவரும் சொதப்பினர். பவுலிங்கும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை.

கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் மோசமான பார்மில் இருக்கிறார் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மா. சில ஆண்டுகளுக்கு முன்னர் ஓப்பனிங் இறங்காமல் ஒண்டவுன் இடத்தில் இறங்கி விளையாடி வந்தார். இந்நிலையில் இப்போது மிடில் ஆர்டர் பேட்டிங் பலவீனமாக இருப்பதால் மீண்டும் மிடில் ஆர்டரில் இறங்கி விளையாட வேண்டும் என முன்னாள் இந்திய அணி வீரர் அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் “ மும்பை அணிக்கு அனுபவம் வாய்ந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் தேவை. ரோஹித் ஷர்மா மிடில் ஆர்டரில் ஆடினால் 7 முதல் 15 ஓவர்களில் சிறப்பாக இருக்கும். அது மும்பை அணிக்கு சாதகமாக அமையும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலகக்கோப்பை நட்சத்திரங்கள்: தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷை கௌரவப்படுத்த ஈஸ்ட் பெங்கால் கிளப் திட்டம்!

ஏபிடி தயவு செஞ்சு எனக்கு அந்த விஷயத்துல உதவி செய்ங்க… சூர்யகுமார் யாதவ் கோரிக்கை!

உலகக் கோப்பையை வென்றதும் கல்யாணம்தான்… கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவிப்பு!

போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளேன்… முன்னாள் ஜிம்பாப்வே கேப்டன் அறிவிப்பு!

ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியா கோப்பை: இந்திய ஏ அணியில் வைபவ் சூர்யவன்ஷி.. கேப்டன் யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments