Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் ஷர்மா இந்த தவறை செய்துவிடக் கூடாது… ரவி சாஸ்திரி கருத்து!

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (15:43 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையிலான டெஸ்ட் போட்டி பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்க உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி ஒன்பதாம் தேதியும், இரண்டாவது பிப்ரவரி 17ஆம் தேதியும் , மூன்றாவது டெஸ்ட் போட்டி மார்ச் 1ஆம் தேதியும் நான்காவது டெஸ்ட் போட்டி மார்ச் 9ஆம் தேதியும் நடைபெற உள்ளது. அதனை அடுத்து ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த தொடரை வெல்ல இரு அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தொடர் பற்றி பேசியுள்ள முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி “ரிஷப் பண்ட் போன்ற தாக்கம் ஏற்படுத்தக் கூடிய வீரர் இல்லாததை நாம ஆஸி அணிக்கு வாய்ப்பாக கொடுத்துவிடக் கூடாது. இஷான் கிஷான் சுழல்பந்து வீச்சை எதிர்கொள்வதில் சிரமப்படுகிறார். ஆனால் சூர்யகுமார் யாதவ் பலவகையான ஷாட்களைக் கைவசம் வைத்துள்ளார். அதனால் அவரே சரியான தேர்வாக இருப்பார். கடைசி நேரத்தில் ரோஹித் எந்த தவறும் செய்துவிடக் கூடாது”எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றியோ தோல்வியோ.. 96 ஆண்டு கால சாதனையை சமன் செய்த இந்தியா - இங்கிலாந்து 5வது டெஸ்ட்..!

WTC தொடர்களில் யாரும் படைக்காத சாதனையைப் படைத்த ஜோ ரூட்!

இனிமேல் லெஜண்ட்ஸ் உலகக் கோப்பையில் விளையாட மாட்டோம்… பாகிஸ்தான் அறிவிப்பு!

ஆசியக் கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ் இருக்க மாட்டாரா?... காரணம் என்ன?

வெற்றியை நெருங்கிவிட்ட இங்கிலாந்து அணி.. தொடரை இழக்கின்றதா இந்தியா?

அடுத்த கட்டுரையில்
Show comments