பெரிய ஸ்கோருக்கு அரைசதமோ, சதமோ தேவையில்லை.. இந்திய அணியின் பேட்டிங் அப்ரோச் குறித்து ரோஹித்!

vinoth
ஞாயிறு, 23 ஜூன் 2024 (09:07 IST)
சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 195 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் கோலி, ரிஷப் பண்ட், ஷிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஹர்திக் பாண்ட்யா அதிகபட்சமாக 27 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தார்.

இதன் பின்னர் ஆடவந்த பங்களாதேஷ் அணி ஆரம்பம் முதலே ரன்களை சேர்க்க முடியாமல் தடுமாறியது. அதனால் அடித்து ஆடமுயன்று அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 146 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்திய அணி சார்பில் பும்ரா, அர்ஷ்தீப் தலா 2 விக்கெட்களும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்களும் வீழ்த்தினர்.

இந்த போட்டி முடிந்ததும் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா “எங்கள் அணியின் தனிநபர் அதிகபட்ச ஸ்கோரே 50 தான். ஆனால் நாங்கள் 195 ரன்கள் என்ற பெரிய இலக்கை நிர்ணயித்தோம். டி 20 போட்டிகளில் பெரிய ஸ்கொரை எட்ட அரைசதங்களோ, சதமோ தேவையில்லை. எதிரணி பவுலர்களை அழுத்தத்தில் வைத்திருந்தாலே போதுமானது. எங்கள் அணியின் 8 பேட்ஸ்மேன்களும் அதை சிறப்பாக செய்தார்கள்” என பாராட்டி பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இன்னும் அதிக வாய்ப்புகளுக்குத் தகுதியானவன்… கருண் நாயர் ஆதங்கம்!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்.. அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா.. ஒரு போட்டியில் கூட வெல்லாமல் அசிங்கப்பட்ட பாகிஸ்தான்..

ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டி… கேப்டனாகும் ஸ்டீவ் ஸ்மித்!

உடலுக்குள் தொடரும் ரத்தக்கசிவு! ஐசியுவில் ஸ்ரேயாஸ் ஐயர்! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஓய்வெல்லாம் அதுக்குப் பிறகுதான்… ரோஹித் ஷர்மாவின் சிறுவயது பயற்சியாளர் உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments