Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஓவரில் வேண்டுமென்றே ரிட்டையர்ட் ஹர்ட் ஆன ரோஹித் ஷர்மா… வெடித்த சர்ச்சை!

vinoth
வியாழன், 18 ஜனவரி 2024 (07:28 IST)
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இரு அணிகளும் சமமான ரன்கள் அடித்ததால் சூப்பர் ஓவர் போடப்பட்டது. ஆனால் சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் சமமான ரன்கள் எடுத்ததால் இரண்டாவது சூப்பர் ஓவர் போடப்பட்டது. அதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 4 விக்கெட்களை இழந்து 212 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணியும் 212 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து நடந்த முதல் சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி 16 ரன்கள் சேர்க்க, அதன் பின்னர் ஆடிய இந்திய அணியும் இலக்கை நெருங்கியது. அந்த ஓவரின் கடைசி ஒரு பந்தில் 2 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற போது ரோஹித் ஷர்மா நான் ஸ்ட்ரைக்கர் முனையில் இருந்தார். அப்போது தன்னால் துரிதமாக ஓட முடியாது என்பதால் ரிட்டையர் ஹர்ட் ஆகி ரிங்கு சிங்கை இறங்க வைத்தார்.

ஆனால் அதன் பின்னர் நடந்த இரண்டாவது சூப்பர் ஓவரில் அவர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். விதிப்படி அவரை நடுவர்கள் இரண்டாவது சூப்பர் ஓவரில் பேட் செய்ய விட்டிருக்கக் கூடாது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யா மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் ஆடினால் நான் ஆச்சர்யப்படுவேன்.. தினேஷ் கார்த்திக் சொல்லும் காரணம்!

கான்பூர் டெஸ்ட்: மழைக் காரண்மாக முதல்நாள் ஆட்டம் பாதியிலேயே ரத்து!

கான்பூர் டெஸ்ட் போட்டியைக் காணவந்த வங்கதேச ரசிகரைத் தாக்கிய நபர்கள்… பின்னணி என்ன?

2வது டெஸ்ட்.. டாஸ் வென்ற இந்தியா.. பேட்டிங்கில் திணறும் வங்கதேசம்..!

9 ஆண்டுகளுக்கு பிறகு டாஸ் வென்ற இந்தியா! ப்ளேயிங் லெவனில் மாற்றம் இல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments