Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்கள் செய்த தவறை உங்கள் முன் விவாதிக்க முடியாது- கேப்டன் ரோஹித் ஷர்மா!

vinoth
வியாழன், 13 பிப்ரவரி 2025 (09:28 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து, 3-0 என்ற கணக்கில் முழுமையாக இந்த தொடரை இந்திய அணி வென்றுள்ளது. இதனை அடுத்து, அந்த அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதற்கு முன்னர் நடந்த டி 20 தொடரையும் 4-1 என்ற கணக்கில் வென்று 2025 ஆம் ஆண்டை வெற்றியோடு தொடங்கியுள்ளது.

தொடர்ந்து டெஸ்ட் தொடர்களில் தோல்வி அடைந்ததால் ரோஹித் ஷர்மா மேலெழுந்த விமர்சனங்களுக்கு இந்த வெற்றிகள் பதிலாக அமைந்துள்ளன. பேட்டிங்கிலும் ரோஹித் ஷர்மா சிறப்பாக செயல்பட்டு ஒரு சதத்தை அடித்துள்ளார்.

இந்நிலையில் நேற்றையப் போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “நாங்கள் பெரிய அளவில் எந்த தவறையும் இந்த தொடரில் செய்யவில்லை. ஆனால் இன்னும் சில இடங்களில் நாங்கள் எங்களை சரிசெய்து கொள்ள வேண்டும். நாங்கள் என்ன தவறு செய்தோம் என்பதை உங்கள் முன் விவாதிக்க முடியாது.  நாங்கள் என்ன நினைக்கிறோம் என்பதை வீரர்களிடம் தெளிவாக சொல்லி விடுகிறோம்.” எனப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர் சி பி அணிக்கு புதிய கேப்டன் யார்?... இன்று வெளியாகும் அறிவிப்பு!

3வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி.. முழுமையாக தொடரை வென்றது இந்தியா..!

3வது ஒருநாள் போட்டி.. ஒரு ரன்னில் அவுட்டான ரோஹித் சர்மா.. ஸ்கோர் எவ்வளவு?

விமான நிலையத்தில் பாதுகாப்பு பற்றி கவலைப்படாமல் ரசிகையைக் கட்டிப்பிடித்த கோலி… வைரல் ஆகும் வீடியோ!

சாம்பியன்ஸ் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணிக்குக் கேப்டன் இவர்தான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments