Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலைப் பயிற்சியில் பந்துவீசிய ரோஹித் ஷர்மா… இந்திய அணியில் மாற்றமா?

Webdunia
புதன், 18 அக்டோபர் 2023 (06:54 IST)
இந்திய அணி உலகக் கோப்பை தொடரை சிறப்பாக ஆரம்பித்துள்ளது. முதல் மூன்று போட்டிகளில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளோடு மோதி மூன்று போட்டிகளையும் வென்றுள்ளது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் நாளை பங்களாதேஷ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்த போட்டிக்கு முன்பாக இந்திய அணி வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட போது கேப்டன் ரோஹித் ஷர்மா பந்துவீசி பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

இதனால் இந்திய அணியில் ஏதேனும் மாற்றம் செய்யப்படுமா என சந்தேகம் எழுந்துள்ளது. இந்திய அணியில் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக எடுக்கப்படும் ஷர்துல் தாக்கூர் பெரிதாக பங்களிப்பு செய்வதில்லை. அதனால் அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ்வை அணிக்குள் கொண்டுவர, ரோஹித் ஷர்மா பகுதி நேர பந்துவீச்சாளராக மாறப் போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற டெல்லி.. பூரன், மார்ஷ் அதிரடி வீண்..!

கோலிக்கு 50 ரன்லாம் பத்தாது.. அவருக்கு ஜெயிக்கணும் அவ்ளோதான்! - எம்.எஸ்.தோனி!

கிரிக்கெட் மேட்ச் நடந்து கொண்டிருந்தபோது வங்கதேச வீரருக்கு மாரடைப்பு.. மருத்துவமனையில் அனுமதி..!

ஜோஃப்ரா ஆர்ச்சரை இனவாத ரீதியில் தாக்கிப் பேசினாரா ஹர்பஜன் சிங்?.. எழுந்த சர்ச்சை!

ருதுராஜ் கையில் இருந்த மர்ம பொருள்? பால் டேம்பரிங் செய்ததா CSK? - பரபரப்பு வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments