Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'ரவி சாஸ்திரியை மிஸ் செய்வோம்' - ரோஹித் சர்மா

Webdunia
புதன், 29 ஜூன் 2016 (13:20 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே கடந்த வாரம் தேர்வு செய்யப்பட்டார். இந்த பந்தயத்தில் கடந்த ஓரண்டு காலமாக இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநராக பணி புரிந்த ரவி சாஸ்திரியும் இருந்தார்.
 

 
ஆனால், சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, விவிஎஸ். லட்சுமணன் ஆகிய மூவரின் ஆலோசனையை ஏற்று முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் அனில் கும்ப்ளே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 
இந்நிலையில் அனில் கும்ப்ளே தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து ரோஹித் சர்மா பத்திரிகையாளர்களிடம் கருத்து தெரிவித்தார். அப்போது அவர், முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரியை இந்திய அணி மிஸ் செய்வதாக கூறியுள்ளார்.
 
மேலும், அவர் கூறுகையில், ”ரவி சாஸ்திரி கடந்த 18 மாதங்களாக இந்திய கிரிக்கெட் அணியை நன்கு வழி நடத்தினார். இந்திய அணியின் வெற்றியில் அவரது பங்கு நிச்சயம் உண்டு. அதோடு எங்களை சுற்றிலும் நேர்மறையான எண்ணத்தை அவர் உருவாக்கி கொடுத்தார்.
 
மும்பை இண்டியன்ஸ் அணிக்காக விளையாடிய போது, ரவி சாஸ்திரியுடன் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் மகிழ்ச்சி அளிக்கிறது. அவரிடம் இருந்து நான் ஏராளமானவற்றை கற்றுக்கொண்டேன்” என்று ரோஹித் சர்மா கூறினார்.
 
இதை தவிர்த்து அனில் கும்ப்ளேவை மனதார வாழ்த்தி வரவேற்பதாகவும், இந்திய அணியின் முழு ஒத்துழைப்பையும்  கொடுப்போம் எனவும் கூறினார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments