பழைய தோனி இப்போது இல்லை… முன்னாள் வீரர் சொன்ன கருத்து!

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (10:44 IST)
சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங் ஆர்டரில் முன்பாக இறங்கவேண்டும் என ரிதீந்தர் சோதி கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். அவர் தலைமையில் சி எஸ் கே அணி 4 முறை கோப்பையை வென்றுள்ளது. தற்போது 40 வயதாகும் அவர் இந்த ஆண்டு சி எஸ் கே அணியை தலைமையேற்று விளையாடுகிறார். இன்னும் எத்தனை ஆண்டுகள் அவர் ஐபிஎல் விளையாடுவார் என்று தெரியவில்லை. ஒருவேளை இந்த ஆண்டோடு ஓய்வை அறிவித்தாலும் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தோனியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரான சோதி கருத்து தெரிவித்துள்ளார். அதில் ‘சில ஆண்டுகளுக்கு முன்னர் பேட்டிங்கில் எதிரணியைக் கலங்கவைக்க பழைய பினிஷர் தோனி இப்போது இல்லை. அதனால் அந்த ஐபிஎல் தொடரில் தனது பேட்டிங் ஆர்டரை மாற்றி முன்பே இறங்க வேண்டும். சில ஓவர்கள் செட்டில் ஆகிவிட்டு அவர் விளையாடுவதற்கு இது வசதியாக இருக்கும்’ எனக் கூறியுள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் ஐபிஎல் வரலாற்றில் ரிட்டர்யடு ஹர்ட் ஆன முதல் வீராங்கனை.. ரன் எடுக்க திணறியதால் அதிரடி..!

ஐசிசி தரவரிசையில் ரோகித்தை தாண்டி முன்னேறிய விராட் கோலி!....

1,403 நாட்களுக்குப் பிறகு விராத் கோலிக்கு கிடைத்த பெருமை.. குவியும் வாழ்த்துக்கள்..!

இந்தியாவுடன் கடைசி போட்டி!.. ரசிகர்களை சோகமாக்கிய ஆஸ்திரேலிய கேப்டன்!...

ஹோபர்ட் ஓபன் டென்னிஸ்: வீனஸ் வில்லியம் அதிர்ச்சி தோல்வி!..

அடுத்த கட்டுரையில்
Show comments