Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிஷப் பண்ட்டுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கிய என்சிஏ… ஐபிஎல் தொடரில் ரி எண்ட்ரி!

vinoth
திங்கள், 11 மார்ச் 2024 (06:57 IST)
கடந்த ஆண்டு பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தசைநார் கிழிவுக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இப்போது காயத்தில் இருந்து குணமாகி வரும் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில் களமிறங்குவார் என சொல்லப்படுகிறது.

தற்போது டெல்லி அணிக்காக விளையாடி வரும் பண்ட், அந்த அணிக்கு கேப்டனாகவும் செயல்படுகிறார். விபத்து காரணமாக கடந்த ஐபிஎல் சீசனை இழந்த ரிஷப் பண்ட் அடுத்த சீசனுக்காவது அணிக்கு திரும்புவாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இப்போது வெளியாகியுள்ள தகவலின் படி அவர் பயிற்சி ஆட்டங்களில் சில நாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்டதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமி அவருக்கு ஐபிஎல் தொடரில் விளையாட தடையில்லா உடல்நல சான்றிதழ் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. அவரின் வருகை டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு கூடுதல் பலத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் கோப்பையை வென்று அதைக் கோலிக்காக சமர்ப்பிக்க வேண்டும்… இளம் வீரரின் ஆசை!

மீண்டும் அணிக்காக தன்னுடைய பேட்டிங் பொசிஷனை தியாகம் செய்யும் கே எல் ராகுல்!

கிரிக்கெட் வீரர்கள் ஓய்வை அறிவிப்பதே இந்த பிரச்சனையால்தான்… ஸ்ரீகாந்த் கருத்து!

வீரர்களின் அதிருப்தியைத் தொடர்ந்து கட்டுப்பாடுகளைத் தளர்த்த பிசிசிஐ முடிவு…!

ரோஹித் ஷர்மா ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்… கங்குலி அறிவுரை!

அடுத்த கட்டுரையில்
Show comments