இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பொறுப்பு எனக்குதான் முதலில் வந்தது… ரகசியம் பகிர்ந்த ஜாம்பவான் கிரிக்கெட்டர்!

Webdunia
சனி, 24 ஜூன் 2023 (08:46 IST)
சமீபகாலமாக இங்கிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளை விளையாடும் விதம் உலக கிரிக்கெட் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. அதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது அந்த அணிக்கு கேப்டனாகவும் , பயிற்சியாளராகவும் பென் ஸ்டோக்ஸும் மெக்கல்லமும் பதவியேற்ற பின்னர்தான்.

டெஸ்ட் போட்டிகளில் ஆக்ரோஷமாக விளையாடிய மெக்கல்லம், இப்போது தன்னுடைய பாணியை ஒட்டுமொத்த இங்கிலாந்து அணிக்கும் செயல்படுத்தியுள்ளார். இதை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பாஸ்பால் கிரிக்கெட் என அழைக்கின்றனர். இந்நிலையில் ஆஸி முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளர் ஆகும் வாய்ப்பு தனக்குதான் முதலில் வந்தது எனக் கூறியுள்ளார்.

இதுபற்றி பேசிய அவர் ”இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத் தலைவர் ராப் கீ எனக்கு போன் செய்து பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க முடியுமா எனக் கேட்டார். ஆனால் நான் என் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்க விரும்பியதால் அதை ஏற்கவில்லை.” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

ரோஹித் ஷர்மா, விராட் கோலியை வைத்து குழப்பம் செய்யாதீர்கள்: ரவி சாஸ்திரி கண்டனம்..!

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments