Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் ஷர்மாவைக் கேப்டன் பதவியில் இருந்து தூக்கியது நன்மைதான் – சுனில் கவாஸ்கர் கருத்து!

vinoth
வியாழன், 15 பிப்ரவரி 2024 (08:09 IST)
நடக்க இருக்கும் ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா கடந்த ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட்டார். இது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹர்திக்கை குஜராத்தில் இருந்து ட்ரேட் செய்யும்போதே அவர் தனக்குக் கேப்டன் பதவி வேண்டுமெனக் கேட்டதாகவும், அதற்கு ஒப்புக்கொண்டே மும்பை இந்தியனஸ் அவரை வாங்கியதாகவும் சொல்லப்பட்டது.

அணி நிர்வாகத்தின் இந்த முடிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல், அணி வீரர்களுக்குமே பிடிக்கவில்லை என சொல்லப்படுகிறது. அந்த அணியின் முக்கிய வீரர்களான சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் ஹர்திக் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து அதிருப்தி அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ரோஹித் ஷர்மாவும் இதுவரை ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு வாழ்த்துக் கூட சொல்லவில்லை.

இந்நிலையில் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி பறிப்பு பற்றி பேசியுள்ள முனனாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் “ரோஹித் இந்திய அணிக்கு மூன்று வடிவிலான போட்டிகளிலும் கேப்டனாக இருக்கிறார். அதனால் அவருக்கு அதிக அழுத்தம் இருக்கும். அதனால் அவரின் பேட்டிங் பார்ம் பாதிக்கப்பட்டிருக்கும். இப்போது அழுத்தம் இல்லாமல் பேட்டிங்கில் கவனம் செலுத்தலாம். அதனால் அது அணிக்கும் ரோஹித்துக்கும் நன்மைதான்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பி.சி.சி.ஐ-க்கு தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து விலக்கு.. புதிய மசோதாவால் பரபரப்பு..!

மீண்டும் டெஸ்ட் மற்றும் டி 20 அணியில் ஸ்ரேயாஸ் ஐயர்!.

பும்ரா இல்லாத போட்டிகளில் எல்லாம் இந்தியா வெற்றி பெறுகிறதா? சச்சின் சொல்வது என்ன?

சாம்சன் எங்கயும் போகலியாம்… சென்னை ரசிகர்கள் ஆர்வத்தைக் கிளப்பி இப்படி பண்ணிட்டாங்களே!

தொடர்நாயகன் விருதுக்கு ரூட்தான் சரியானவர்… கம்பீரின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை- ஹார் ப்ரூக்!

அடுத்த கட்டுரையில்
Show comments