Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜடேஜாவை சி எஸ் கே அணியின் கேப்டன் பதவியை இழந்தது ஏன்? தற்போது பரவும் தகவல்

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2022 (08:40 IST)
சி எஸ் கே அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஜடேஜா பாதியிலேயே நீக்கப்பட்டது குறித்து தற்போது ஒரு தகவல் பரவியுள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கிய போது ஜடேஜா அளவுக்கு யாருமே மகிழ்ச்சியாக இருந்திருக்க மாட்டார்கள். சென்னை அணியை வழிநடத்தும் பெருமிதத்தோடு களமிறங்கியிருப்பார். ஆனால் அவரின் தனிப்பட்ட மோசமான ஃபார்ம் காரணமாகவும், சி எஸ் கே அணியின் தொடர் தோல்வி காரணமாகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில் கேப்டன் பதவியை மீண்டும் தோனியிடம் ஒப்படைத்தார்.

இந்த ஆண்டு சீசனில் கடைசி சில போட்டிகளில் இருந்து ஜடேஜா விலகினார். இது சம்மந்தமாக சி எஸ் கே அணி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் “ ஜடேஜாவுக்கு பில்டிங்கின் போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்ட காயத்தை அவர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். ஆனால் அவரின் காயத்தில் முன்னேற்றம் இல்லாததால் அவர் இந்த தொடரில் இருந்து விலகுகிறார். அவர் சீக்கிரம் திரும்பி வருவார் என்ற நம்பிக்கை உள்ளது” எனக் கூறி இருந்தது.

ஆனால் மற்றொரு பக்கத்தில் ஜடேஜாவை சமூகவலைதளத்தில் பின் தொடர்வதை சி எஸ் கே அட்மின் பக்கம் நிறுத்தியது. ஏற்கனவே இதுபோலதான் ரெய்னா ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய போதும் அவரை முதலில் அன் பாலோ செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ஜடேஜா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சி எஸ் கே அணி தொடர்பான தனது பதிவுகள் சிலவற்றை நீக்கினார்.

இந்நிலையில் இப்போது ஜடேஜா மீண்டும் சி எஸ் கே அணிக்காக விளையாடமாட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்நிலையில் ஜடேஜா பாதியிலேயே கேப்டன் பதவியில் இருந்து ஏன் நீக்கப்பட்டார் என ஒரு தகவல் தற்போது பரவி வருகிறது. அதில் “கேப்டன் பொறுப்பேற்றதில் இருந்து அணியில் தனி வீரராகவும், கேப்டனாகவும் மோசமாக செயல்பட்டர். இது அவருக்கு இந்திய அணியில் பிரச்சனையை ஏற்படுத்தலாம் என்பதால் தோனியும் சி எஸ் கே அணியின் உரிமையாளர்களும் இணைந்துதான் அந்த முடிவு எடுக்கப்பட்டதாக” சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் RCB அணிக்குள் வருவேனா?... டிவில்லியர்ஸ் அளித்த பதில்!

தோனி, ரோஹித் சர்மாவை விட சுப்மன் கில் சிறந்தவர்: சேவாக் மகன் ஆர்யாவீர் சர்ச்சை கருத்து..!

ட்ரீம் 11 உடனான உறவை முறித்துக் கொள்கிறோம்… பிசிசிஐ தரப்பு பதில்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சராக தொடர விருப்பமில்லை… பிசிசிஐயிடம் தெரிவித்த Dream 11

42 பந்துகளில் சதமடித்த சஞ்சு சாம்சன்.. ஆசிய கோப்பையிலும் அசத்துவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments