Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி எஸ் கேவை எத்தனை ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினால் ஆர் சி பி ப்ளே ஆஃப்க்கு செல்ல முடியும்?

vinoth
திங்கள், 13 மே 2024 (07:04 IST)
நேற்று பெங்களூருவில் நடந்த இரண்டாவது ஐபிஎல் போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. ரஜத் படிதார் அபாரமாக விளையாடி அரை சதம் அடித்தார்.  அந்த அணியின் கோலி, ரஜத் படிதார், வில் ஜாக்ஸ் மற்றும் கேமரூன் க்ரீன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதனையடுத்து 188 என்ற இலக்கை நோக்கி விளையாடிய  டெல்லி அணி 19.1 ஓவர்களில் 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது. இந்த வெற்றியின் மூலம் ஆர் சி பி அணி புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியது மட்டுமில்லாமல் ப்ளே ஆஃப் வாய்ப்பையும் பிரகாசமாக்கியுள்ளது.

ஆர் சி பி அணி தங்களுடைய கடைசி போட்டியில் சி எஸ் கே அணியை சின்னசாமி மைதானத்தில் எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் சி எஸ் கே அணியை சில நிபந்தனைகளோடு வெற்றி பெற்றால் அந்த அணியால் ப்ளே ஆஃப் செல்ல முடியும். முதலில் ஆர் சி பி பேட் செய்தால் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் சி எஸ் கே நெட் ரன் ரேட்டை அந்த அணி தாண்டும். அதுபோல இரண்டாவது பேட் செய்தால் ஆர் சி பி 18.1 ஓவர்களுக்குள் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்று லக்னோ அணி தங்கள் இரண்டு போட்டிகளில் ஒன்றில் தோற்றால் ஆர் சி பி அணி நான்காவது இடத்துக்கு முன்னேறி ப்ளே ஆஃப் செல்லும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றைய போட்டியில் பனியின் தாக்கம் இருக்குமா?.. டாஸ் வெல்லும் அணி எடுக்கப்போகும் முடிவு!

அதிரடி மன்னன் அபிஷேக் ஷர்மா இன்றைய போட்டியில் விளையாட மாட்டாரா?

ரஞ்சி போட்டியில் சதமடித்து விமர்சனங்களுக்கு பதில் கொடுத்த ஷுப்மன் கில்!

ஐசிசியின் சிறந்த டெஸ்ட் கேப்டன் விருதை இரண்டாவது முறையாக வென்ற பேட் கம்மின்ஸ்!

பிசிசிஐ-யின் புதிய விதி கோலிக்கு அதிக நெருக்கடியை ஏற்படுத்தும்.. பிராட் ஹாக் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments