Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஸ்வினை வீழ்த்த இருக்கும் பாகிஸ்தான் வீரர்

அஸ்வினை வீழ்த்த இருக்கும் பாகிஸ்தான் வீரர்
, வெள்ளி, 14 அக்டோபர் 2016 (14:22 IST)
இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினின் சாதனையை பாகிஸ்தான் வீரர் யாசிர் ஷா முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

 
இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆசிய துணைக்கண்டத்திலேயே குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக உள்ளார். அஸ்வின் 18 போட்டிகளில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
 
இந்நிலையில், பாகிஸ்தானும், மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி துபாய் சர்வதேச விளையாட்டு மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா புதிய சாதனைப் படைக்க வாய்ப்புள்ளது.
 
யாசிர் ஷா இதுவரை 95 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் பாகிஸ்தான் வீரர் யாசிர்ஷாவுக்கு இது 17 வது டெஸ்ட் போட்டி ஆகும்.
 
இப்போட்டியில் யாசிர்ஷா இன்னும் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினால், ஆசிய கண்டத்திலே மிகக்குறைந்த போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை பெறுவார்.
 
இந்நிலையில், யாசிர் ஷாவுக்கு அஸ்வின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சேவாக், அஸ்வின் இருவருக்கும் அவசரம் : மனைவிகள் கலாய்ப்பு