Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை 40 ஓவர்களாக குறைக்கவேண்டும்’… ரவி சாஸ்திரியின் கருத்து!

Webdunia
புதன், 27 ஜூலை 2022 (09:54 IST)
டி 20 கிரிக்கெட் போட்டிகளுக்கு கிடைக்கும் அதீத வரவேற்பால் ஒருநாள் போட்டிகளுக்காக ரசிகர்கள் குறைந்து வருகின்றனர்.

டி 20 போட்டிகளின் வரவால் டெஸ்ட் போட்டிகளுக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் ஒரு நாள் போட்டிகள் தங்கள் கவர்ச்சியை இழந்து வருகின்றன. பல வீரர்களும் ஒருநாள் போட்டிகளில் விளையாட ஆர்வம் காட்டுவதில்லை. மாறாக டி 20 போட்டிகள் மற்றும் லீக் போட்டிகளில் விளையாடி சம்பாதிக்க ஆர்வமாக உள்ளனர். சமீபத்தில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது ஒருநாள் போட்டிகளின் எதிர்காலம் மீதான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பலரும் ஒருநாள் போட்டிகளை நிறுத்திவிட வேண்டும் எனவும், சிலர் அதில் சில மா
ற்றங்களை செய்தால் மட்டுமே தொடர்ந்து நிலைக்க செய்ய முடியும் எனவும் கூறி வருகின்றனர். இந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி “ஒருநாள் போட்டிகளை 40 ஓவர்கள் கொண்ட இன்னிங்ஸ்களாக குறைக்கவேண்டும்” எனக் கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து ஆதரவையும் எதிர்ப்பையும் ஒருசேர பெற்றுள்ளது. ஏற்கனவே 60 ஓவர்களாக இருந்த போட்டி 50 ஓவர்களாக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments