Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக் கோப்பையில் ஜடேஜா இல்லையா?... பயிற்சியாளர் டிராவிட்டின் பதில் இதுதான்!

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (08:36 IST)
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்தர ஜடேஜா உலகக்கோப்பை டி 20 போட்டியில் விளையாட மாட்டார் என தகவல்கள் பரவின.

தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றூ நடைபெற்று வரும் நிலையில் திடீரென இந்திய அணியில் இருந்து ஜடேஜா விலகியுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதில் மாற்று வீரராக அக்ஸர் படேல் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் இன்னும் சில மாதங்களில் நடக்க உள்ள டி 20 உலகக் கோப்பையிலும் விளையாட மாட்டார் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள இந்திய தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஜடேஜாவின் காயத்தைப் பொறுத்தே முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இதுபற்றி அவர் “இப்போது ஜடேஜா மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ளார். உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் 7 வாரங்கள் உள்ளன. அதனால் இப்போதே அவர் இடம்பெற மாட்டார் என சொல்ல முடியாது. அதனால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” எனக் கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி செய்யும் தவறு இதுதான்… முக்கியமான விஷயத்தை சுட்டிக் காட்டிய அசாரூதின்!

பும்ரா எங்களுக்கு அதிகமாக வேலை வைக்கிறார்… ஆஸி கேப்டன் பாராட்டு!

கோலி, ரோஹித் ஷர்மா எப்போது ஓய்வு?... ரவி சாஸ்திரி கருத்து!

கிங் இறந்துவிட்டார்.. புதிய கிங் பொறுப்பேற்றுக் கொண்டார் – கோலி குறித்து தடாலடி கருத்தை சொன்ன முன்னாள் வீரர்!

ஒரு ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்கள்… சச்சின், கவாஸ்கர் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்!

அடுத்த கட்டுரையில்
Show comments