Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி 20 போட்டிகளில் அதிக விக்கெட்கள்… 26 வயதில் ரஷீத் கான் படைத்த சாதனை!

vinoth
புதன், 5 பிப்ரவரி 2025 (08:50 IST)
சில ஆண்டுகளுக்கு சர்வதேசக் கிரிக்கெட்டில் டி 20 போட்டிகளில் குறைந்த வயதில் 100 விக்கெட்கள் வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை படைத்தார் ரஷீத் கான். இவர் 53 போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார்.. அதே போல குறைந்த வயதில் ஒட்டுமொத்தமாக டி 20 போட்டிகளில் 400 விக்கெட்களை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையும் ரஷீத் கான் வசம்தான் உள்ளது.

இந்நிலையில் தற்போது டி 20 போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ரஷீத் கான் 633 விக்கெட்களோடு முதலிடத்தில் இருக்க டுவெய்ன் பிராவோ 631 விக்கெட்கள் சேர்த்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.

சமீபகாலமாக இந்திய தவிர மற்ற நாட்டு வீரர்கள் பல லீக் டி 20 போட்டிகளில் கலந்துகொண்டு வருகின்றனர். அந்த வகையில் பல தொடர்களில் விளையாடி வரும் ரஷீத் கான் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்களை விமர்சனம் செய்யும் முன் அதை மறந்துவிடாதீர்கள்… ஷுப்மன் கில் ஆதங்கம்!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் அதிரடி மாற்றம்..!

உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரன் நான்தான்… ரொனால்டோ தடாலடி!

கோலியும் ரோஹித்தும் யாருக்கும் தங்களை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை… கம்பீர் ஆதரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments