வன்மத்த கக்கிட்டான்… ஆர் சி பி ஆண்கள் அணியைக் கலாய்த்து பதிவிட்ட ராஜஸ்தான் ராயல்ஸ்!

vinoth
திங்கள், 18 மார்ச் 2024 (07:30 IST)
மகளிர் பிரிமியர் லீக் (WPL 2024) போட்டியில் நேற்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை இறுதி போட்டியில் எதிர்கொண்ட நிலையில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி போட்டியை வென்று முதல் முறையாக கோப்பையைத் தழுவியுள்ளது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி அணி ஆரம்பத்தில் நன்றாக விளையாடி வந்தாலும் 7வது ஓவரில் விக்கெட்டில் சறுக்க ஆரம்பித்தது. தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 18வது ஓவரிலேயே 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதன் பிறகு ஆடிய பெங்களுர் அணி நிதானமாக விளையாடி இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

இதனையடுத்து கோப்பையை வென்ற ஆர் சி பி பெண்கள் அணிக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சமூகவலைதளப் பக்கத்தில் ஒரு மீமை பகிர்ந்து ஆர் சி பி பெண்கள் அணியைப் பாராட்டியும், ஆண்கள் அணியை ட்ரோல் செய்யும்  விதமாக ஒரு பதிவிட்டுள்ளனர். ஆர் சி பி ஆண்கள் 17 ஆண்டுகளாக ஒரு கோப்பையைக் கூட வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

ஐபிஎல் மினி ஏலம்: 350 வீரர்களுடன் இறுதிப் பட்டியல் வெளியீடு!

அடுத்த கட்டுரையில்
Show comments