சிஎஸ்கேவுக்கு இந்த நிலை இனி வராது.. சோனு பாய் எண்ட்ரி!?? – சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி!

Webdunia
திங்கள், 2 நவம்பர் 2020 (10:09 IST)
நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் சுரேஷ் ரெய்னா விளையாடாத நிலையில் அடுத்த ஆண்டு விளையாடுவாரா என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடர் அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதன்முறையாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெறாமல் தாயகம் திரும்பவுள்ளது சிஎஸ்கே ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடப்பு தொடரில் சிஸ்கேவின் தோல்விகளுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமான காரணம் சுரேஷ் ரெய்னா. ஐபில் தொடருக்காக அமீரகம் சென்றவர் தனது தனிப்பட்ட பிரச்சினைகளால் போட்டி தொடங்கும் முன்னே அணியை விட்டு விலகி நாடு திரும்பினார். சிஎஸ்கே ஒவ்வொரு முறை தோற்றபோதும் சுரேஷ் ரெய்னா இருந்திருந்தால் சிஎஸ்கேவுக்கு இந்த நிலை இல்லை என்று ரசிகர்கள் புலம்பி வந்தனர்.

இந்நிலையில் அடுத்த ஆண்டு போட்டியிலாவது ரெய்னா கலந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரெய்னாவிடம் தொடர்ந்து சிஎஸ்கேவுக்காக விளையாடுவீர்களா என கேட்கப்பட்டபோது ”மஞ்சள்தான் என் வாழ்க்கை” என பதில் அளித்துள்ளார். தோனியும் தான் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற போவதில்லை என கூறியுள்ள நிலையில் அடுத்த ஆண்டு இந்த இருவர் கூட்டணியில் சிஎஸ்கே மற்ற அணிகளை பந்தாடும் என ரசிகர்கள் ஆவலாக காத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா புயலில் வீழ்ந்த தென்னாப்பிரிக்கா.. 159 ரன்களுக்கு ஆல் அவுட்..!

இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி.. ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை தூக்கிய பும்ரா

சேட்டன் வந்தல்லோ… கையெழுத்தானது ‘டிரேட்’… சென்னையில் சஞ்சு சாம்சன்!

ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை: ஐபிஎல் வரலாற்றில் 3 முறை 'டிரேட்' செய்யப்பட்ட முதல் வீரர்!

தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments