தினேஷ் கார்த்திக் தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்? – ராகுல் டிராவிட் விளக்கம்!

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (11:27 IST)
இந்திய அணியில் நீண்ட காலம் கழித்து தினேஷ் கார்த்திக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறித்து ராகுல் டிராவிட் விளக்கம் அளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர்களில் சிறப்பான பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் விளங்குபவர் தினேஷ் கார்த்திக். கடந்த பல சீசன்களாக ஐபிஎல்லில் சிறப்பான விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் நீண்ட காலமாக இந்திய கிரிக்கெட் அணியின் சுற்றுபயண ஆட்டங்கள் உள்ளிட்டவற்றில் இடம் பெறாமல் இருந்தது அவரது ரசிகர்களுக்கு ஒரு குறையாக இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணியில் தினேஷ் கார்த்திக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் “தினேஷ் கார்த்திக் சிறப்பான ஆட்டத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் நிலையாக விளையாடி உள்ளார். எந்த அணிக்காக விளையாடினாலும் தனது முழு பங்களிப்பை செலுத்தியுள்ளார். அதனாலேயே இந்திய அணிக்கு விளையாட அவர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

350 என்ற இலக்கை நெருங்கி பயம் காட்டிய தென் ஆப்பிரிக்கா.. ரசிகர்களுக்கு ஒரு த்ரில் போட்டி..!

விராத் கோலி அபார சதம்.. ரோஹித் சர்மா அரைசதம்.. 300ஐ தாண்டிய இந்தியாவின் ஸ்கோர்..!

இந்தியா தென்னாபிரிக்கா முதல் ஒருநாள் போட்டி.. டாஸ் வென்றது யார்? ஆடும் லெவனில் யார் யார்?

12 பந்துகளில் அரைசதம்.. 32 பந்துகளில் சதம்.. அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டம்..

அடுத்த கட்டுரையில்
Show comments