ரபடா தாக்குதலில் நிலைகுலைந்த இந்திய பேட்டிங் ஆர்டர்!... முதல் நாள் நிலவரம்!

Webdunia
புதன், 27 டிசம்பர் 2023 (06:53 IST)
இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையே முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் டாஸ் வென்று பந்துவீச்சை தென்னாப்பிரிக்க அணி தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்ய களத்தில் இறங்கியது.

கேப்டன் ரோகித் சர்மா  ஐந்து ரன்களில் அவுட் ஆக அதனை அடுத்து சுப்மன் கில் இரண்டு ரன்களில் அவுட்டானார். இதனை அடுத்து ஜெயஸ்வால் 17 ரன்களிலும் ஸ்ரேயாஸ் ஐயர் 31 ரன்களில் அவுட் ஆகினர். நிதானமாக விளையாடிய கோலி 38 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு பக்கம் வரிசையாக விக்கெட்கள் விழுந்தாலும் மறுமுனையில் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தார்.

முதல் நாள் ஆட்டமுடிவில் இந்திய அணி 208 ரன்கள் சேர்த்து 8 விக்கெட்களை இழந்துள்ளது. ராகுல் 70 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். தென்னாப்பிரிக்கா சார்பில் கசிகோ ரபாடா அதிகபட்சமாக 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இதுவரை ஜெயித்தது பெரிதில்லை.. இன்னும் 2 போட்டிகளில் ஜெயிக்க வேண்டும்: இந்திய அணியின் பயிற்சியாளர்

அரையிறுதி, இறுதி போட்டின்னாலே தெ.ஆப்பிரிக்காவுக்கு அலர்ஜி.. இன்னொரு தோல்வி..!

அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்துவது எங்களுக்கு ஸ்பெஷல்.. இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக்..!

தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில் ஐபிஎல் போட்டி இல்லையா? பரபரப்பு தகவல்..!

இந்தியா - இங்கிலாந்து போட்டியில் மழை பெய்தால்? இறுதி போட்டிக்கு செல்லும் அணி எது?

அடுத்த கட்டுரையில்
Show comments