Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 ஆண்டுகளுக்குப் பின் சொந்த மண்ணில் ஆஸி. படுதோல்வி

Webdunia
திங்கள், 7 நவம்பர் 2016 (16:02 IST)
தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 177 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
 

 
தென் ஆப்பிரிக்க அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் நடைபெற்றது.
 
இதில் தென்ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 242 ரன்களும், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 244 ரன்களும் சேர்த்திருந்தன. பின்னர், 2 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா அணியில் டீன் எல்கர் [127] மற்றும் ஜே.பி.டுமினி [141] அவர்களின் அபார ஆட்டத்தில் 540 ரன்கள் குவித்தது.
 
இதனையடுத்து, ஆஸ்திரேலியா அணிக்கு வெற்றி இலக்காக 539 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடாவின் அற்புதமான பந்துவீச்சில் [5 விக்கெட்டுகள்] ஆஸ்திரேலியா அணி சுருண்டது.
 

 
இதனால் ஆஸ்திரேலியா அணி 361 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகப்பட்சமாக கவாஜா 97 ரன்களும், பீட்டர் நெவில் 60 ரன்களும் குவித்தனர்.
 
2012ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆஸ்திரேலியா அணி சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் தோற்றுள்ளது. அப்போதும் இதே தென் ஆப்பிரிக்கா அணியிடம்தான் 309 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் ஐந்து ஆஸி. பவுலர்கள்!

லீக் போட்டிகளில் விளையாட தேசிய அணியைக் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள்… லாரா வேதனை!

மான்செஸ்டர் டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவாரா?... துணைப் பயிற்சியாளர் அளித்த பதில்!

பும்ரா அடுத்த இரண்டு போட்டிகளிலும் விளையாட வேண்டும்… அனில் கும்ப்ளே கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments