Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீழ்ந்து நிமிர்ந்த இந்தியா; சதத்தை தவறவிட்ட புஜாரா, ரஹானே

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (18:36 IST)
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸின் 7 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்துள்ளது.
 

 
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
 
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஷிகர் தவான் 1 ரன்களில் ஹென்றி பந்தில் போல்ட் ஆனார். பின்னர் வந்த முரளி விஜயும் ஹென்றி பந்திலேயே 9 ரன்களில் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் விராட் கோலி ட்ரெண்ட் போல்ட் பந்தில் 9 பெவிலியன் திரும்பினார்.
 
இதனால் ஆரம்பத்திலேயே 46 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர், புஜாராவுடன் ரஹானே இணைந்து சரிவில் இருந்த இந்திய அணியை தூக்கி நிறுத்தினர். இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்தனர். இதற்கிடையில் இருவரும் அரைச்சதம் கடந்தனர்.
 
சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட புஜாரா 87 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த ரோஹித் சர்மா 2 வெளியேறினார். அதேபோல் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரஹானேவும் 77 ரன்கள் அவுட் ஆகி அதிர்ச்சி தந்தார். ஆல் ரவுண்டர் அஸ்வின் 26 ரன்கள் எடுத்தார்.
 
முதல்நாள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் குவித்தது. விருத்திமான் சஹாவும், ரவீந்திர ஜடேஜாவும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து அணி தரப்பில் மாட் ஹென்றி 3 விக்கெட்டுகளும், ஜீத்தன் பட்டேல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சில போட்டிகள் நம் கூடவே இருக்கும்… அவற்றின் வெற்றி தோல்விகளுக்காக அல்ல… லார்ட்ஸ் போட்டி குறித்து பதிவிட்ட சிராஜ்!

3வது டெஸ்ட் போட்டி.. கேப்டன் கில் இடம் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கேட்ட ஒரே ஒரு கேள்வி..

கற்றுக் கொடுப்பதை ஒருபோதும் டெஸ்ட் கிரிக்கெட் நிறுத்தாது- ரிஷப் பண்ட் கருத்து!

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments