Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் கேரியரை முடித்துவிடுவேன் என மிரட்டி RCB அணிக்காக ஆடவைத்தார்… பிரவீன் குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்!

vinoth
செவ்வாய், 9 ஜனவரி 2024 (07:41 IST)
இந்திய அணிக்காக குறிப்பிடத்தகுந்த அளவுக்கு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார் பிரவின் குமார். கடந்த 2007 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகம் ஆனவர் பிரவீன் குமார்.  2008 ஆம் ஆண்டு நடந்த காமன்வெல்த் முத்தரப்பு தொடரை இந்தியா வெல்ல இவர் முக்கியக் காரணிகளில் ஒருவராக இருந்தார்.

அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கும் தேர்வு செய்யப்பட்டு பின்னர் காயம் காரணமாக விலகினார். பின்னர் இவர் சில காலம் இந்திய அணியில் வாய்ப்பு இல்லாமல் இருந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ஐபிஎல் தொடர் ஆரம்த்த 2008 ஆம் ஆண்டு இவர் பெங்களூர் அணிக்காக ஆட ஒப்பந்தமானார். ஆனால் தனக்கு பெங்களூர் அணியில் ஆடவிருப்பமில்லை என்றும் டெல்லி அணிக்காகவே விளையாட விரும்பியதாகவும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து “நான் டெல்லி அணிக்காக ஆட விரும்பினேன். ஆனால் லலித் மோடி “நீ பெங்களூர் அணிக்காக ஆடவில்லை என்றால் உன் கேரியரை முடித்து விடுவேன்” என மிரட்டி என்னை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்தார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னை சுற்றி எழுந்துள்ள சர்ச்சைகளைக் கண்டுகொள்வதில்லை… வைபவ் சூர்யவன்ஷி பதில்!

சாம்பியன்ஸ் கோப்பையை ஹைபிரிட் மாடலில் நடத்த ஒத்துக்கொண்ட பாகிஸ்தான்… வைத்த நிபந்தனைகள் இதுதான்!

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

இந்திய அணிக்குக் கேப்டன் ஆக ஆசைப்பட்டார் பண்ட்… டெல்லி கேப்பிடல்ஸ் அணி உரிமையாளர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments