Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக பொல்லார்ட் நியமனம்

Webdunia
வெள்ளி, 12 செப்டம்பர் 2014 (10:14 IST)
20 ஓவர் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஆல்ரவுண்டர் பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 13 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 4 வரை நடைபெற உள்ளது.

தகுதிச் சுற்று ஆட்டங்கள் ராய்ப்பூரில் அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பின்னர் பிரதான சுற்று ஆட்டங்கள் வருகிற செப்டம்பர் 17 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் விளையாட 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

இதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகினார்.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய கேப்டனாக வெஸ்ட் இண்டீஸின் ஆல்ரவுண்டர்  பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார் என்று மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

வெஸ்ட் இண்டீசில் நடந்த கரீபியன் பிரிமியர் லீக்கில் பொல்லார்ட் தலைமையிலான பார்படோஸ் டிரைடென்ட்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதே, அவருக்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவி கிடைக்க உதவியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?

Show comments