Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாயிண்ட்ஸ் குறைப்பாளரான ஆர்சிபி.. தப்பித்து மேலேறுமா குஜராத் டைட்டன்ஸ்! – இன்று RCB vs GT பலப்பரீட்சை!

Prasanth Karthick
ஞாயிறு, 28 ஏப்ரல் 2024 (11:15 IST)
இன்றைய பிற்பகம் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸை எதிர்கொள்ள உள்ள நிலையில் இந்த போட்டி எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.



இந்த சீசன் தொடங்கி இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்சிபி அணி வெறும் இரண்டே போட்டிகளில் மட்டும் வென்று புள்ளிப்பட்டியலில் இறுதியில் உள்ளது. இனி வரும் 5 போட்டிகளில் வென்றாலும் கூட ஆர்சிபியால் ப்ளே ஆப்க்கு தகுதி பெற முடியாது. ஆனால் அதேசமயம் இனி வரும் போட்டிகளில் ஆர்சிபியிடம் தோற்கும் அணிகளின் ப்ளே ஆப் கனவும் அபாயத்திற்கு உள்ளாகும்.

ALSO READ: சேப்பாக்கத்தை அமைதிப்படுத்த ப்ளான் போடும் கம்மின்ஸ்? திரும்ப அடிக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்? – இன்று SRH vs CSK மோதல்!

இந்நிலையில்தான் இன்று குஜராத் டைட்டன்ஸ் ஆர்சிபியை எதிர்கொள்கிறது. 9 போட்டிகளில் 4 போட்டிகளில் வென்று 8 புள்ளிகளை வைத்துள்ள குஜராத் அணி அடுத்த 5 போட்டிகளிலும் வென்றால்தான் ப்ளே ஆப் செல்ல வாய்ப்பு கிடைக்கும். குஜராத் அணியை பொறுத்தவரை ஒரு போட்டி வெற்றி என்றால் மறுபோட்டி தோல்வி என்ற கணக்கிலேயே தொடர்ந்து விளையாடி வருகிறது.

கடந்த போட்டியில் தோல்வி அடைந்த குஜராத் அணி இந்த போட்டியில் வெல்லும் வாய்ப்புகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இனி ஆர்சிபி நல்ல ஃபார்முக்கு வந்தால் அதனுடன் விளையாடும் அணிகளின் பாயிண்ட்ஸ் குறைப்பாளராக மாறும் வாய்ப்பும் உள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் விளையாடும் பவுலர்களுக்கு உளவியல் ஆலோசனை தரவேண்டும்- அஸ்வின் கருத்து!

கோலி, ரோஹித் ஆகியோரை A+ பிரிவில் இருந்து நீக்க பிசிசிஐ ஆலோசனையா?

என்னடா இது ரியான் பராக்குக்கு எல்லாம் ரசிகரா?... திட்டமிட்டு செய்யப்படும் PR வேலையா?

கிரிக்கெட் என்ற பெயரையே ‘பேட்டிங்’ என மாற்ற வேண்டியதாக இருக்கும்- ரபாடா புலம்பல்!

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

அடுத்த கட்டுரையில்
Show comments